Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2012 ஜனவரி 18 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் 150ஆவது பிறந்ததினத்தையொட்டி கண்டியிலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சித்திரக் கண்காட்சி கண்டியில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ளது.
கண்டி ஈ.எல்.சேனாநாயக்க சிறுவர் நூலகத்தில் நடைபெறுகின்ற இக்கண்காட்சியில் ரவீந்திரநாத் தாகூரினால் வரையப்பட்ட 44 வகையான ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பெருமளவான பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் கண்டுகளிக்கும் இக்கண்காட்சி நாளை வியாழக்கிழமை வரை நடைபெறும்.
இதற்கான ஆரம்ப நிகழ்வில் கண்டி மேயர் மகேந்திர ரத்வத்தை பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார். இந்திய உதவித் தூதுவர் ஏ.நட்ராஜன் விசேட அதிதியாக இக்கண்காட்சியில் கலந்துகொண்டார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago