2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்; நூல் வெளியீட்டு விழா

A.P.Mathan   / 2012 ஜூன் 19 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


அஷ்ரஃப் சிஹாப்தீன் மொழிபெயர்த்த, அறபுக் கதைகளின் தொகுப்பான “ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்” என்ற சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு விழா எதிர்வரும் 30.06.2012 சனிக்கிழமை பி.ப. 4.45 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.

டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் மொறிஷியஸ் நாட்டின்  இலங்கைக்கான கௌரவத் தூதுவர் தெ.ஈஸ்வரன் பிரதம அதிதியாகவும் இந்திய முஸ்லிம் லீக் - தேசியச் செயலாளரும் தமிழக மாநிலத் தலைவருமான திருமதி பாத்திமா முஸப்பர் சிறப்பு அதிதியாகவும் கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் மு.கதிர்காமநாதன் விஷேட அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

நூல் அறிமுகவுரையை சட்டத்தரணி திருமதி சுகந்தி ராஜகுலேந்திரா வழங்க நூல் மதிப்புரையை பேராதனைப் பல்கலைக் கழக மெய்யியல் துறைத் தலைவர் கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் அவர்களும் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் க.இரகுபரன் அவர்களும் நிகழ்த்தவுள்ளனர். கவிஞர் ரவூப் ஹஸீரின் கவிதையும் இடம்பெறவுள்ளது.

நூலின் முதற்பிரதியை இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் பெற்றுக் கொள்வார்.

  Comments - 0

  • kalaimakalhidayarisv Thursday, 21 June 2012 05:40 PM

    உங்கள் விழா சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .