2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'தோட்டுப்பாய் மூத்தம்மா' நூல் வெளியீடு

Kogilavani   / 2012 ஜூலை 04 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

கலாபூஷண் பாலமுனை பாறூகின் நான்காவது நூலான 'தோட்டுப்பாய் மூத்தம்மா' எனும் குறுங்காவிய நூலின் வெளியீட்டு நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை பாலமுனை அல் - ஹிதாயா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

கவிஞர் மு. சடாட்சரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி என்.எம்.அப்துல்லா, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.வை. சலீம், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். ஹாசீம் மௌலவி உள்ளிட்டோர் முதன்மை அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

அதேவேளை, பேராசிரியர் செ.யோகராசா, கலாபூஷண் ஆசுகவி அன்புடீன், எழுத்தாளர் ஏ.பி.எம். இத்ரீஸ், மன்சூர் ஏ.காதர் மற்றும் ஆசிரியர் ஹனீபா இஸ்மாயில் உள்ளிட்டோர் விழாவில் சிறப்புரையாற்றினார்கள்.

பாலமுனை பாறூக் ஏற்கனவே பதம், சந்தனப் பொய்கை எனும் கவிதை தொகுதிகளையும், கொந்தளிப்பு எனும் குறுங்காவியத்தினையும் வெளியிட்டுள்ளார். அந்தவகையில், 'தோட்டுப்பாய் மூத்தம்மா' எனும் குறுங்காவியம் பாலமுனை பாறூக்கின் நான்காவது நூலாகும்.






You May Also Like

  Comments - 0

  • nila Thursday, 05 July 2012 02:34 PM

    வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X