2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஜீவானந்தம் நூல் வெளியீடு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 05 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிஷனின் தலைவராக சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஸ்ரீமத்சுவாமி ஜீவானந்தாஜீ மகராஜின் 6ஆவது ஆண்டு நினைவாக ஜீவானந்தம் சிறப்பு நூல் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் இராமகிருஷ்ணமிஷன் குருகுலப் பழைய மாணவர் மன்றம் இந்நூலை வெளியிட்டுவைத்தது. நூலின் முதல் பிரதியை இலங்கை இராமகிருஷ்ணமிஷன் தலைவர் பெற்றுக்கொண்டார்.

இலங்கை இராமகிருஷ்ணமிஷன் தலைவர் ஸ்ரீமத்சுவாமி சர்வரூபானந்தஜீ மகராஜ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
அருட்தந்தை கலாநிதி எம்.சுவாமிநாதன், மௌலவி எம்.ஏ.அப்துல்காதர், ஸ்ரீமத் சுவாமி கபாலீசானந்தா மகராஜ் ஆகியோர் ஆன்மீக அதிதிகளாக கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .