2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

துளிர்கள் சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் நிறைவு விழாவும் குறும்பட வெளியீடும்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 06 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


துளிர்கள் சமூக மேம்பாட்டு நிறுவனத்தின்  08ஆம் ஆண்டு நிறைவு விழாவும் 'சொந்தமென்ன பந்தமென்ன', 'பூமாலை' ஆகிய 2 குறும்பட வெளியீட்டு நிகழ்வும் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

துளிர்கள் நிறுவனத்தின் பணிப்பாளர் ரகு தலைமையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் கலந்துகொண்டு குறும்படங்களை வெளியிட்டு வைத்தார்.

இதன்போது உரையாற்றிய  மேலதிக அரச அதிபர் ரூபினி வரதலிங்கம்,

'உடல் உள மேம்பாட்டின் மூலம் சமூகத்தை நெறிப்படுத்தக்கூடிய மனநிலை எல்லோர் மனங்களிலும் வரவேண்டும். அவ்வாறு வருகின்றபோது சிறந்த சமுதாயக் கட்டமைப்பை உருவாக்கமுடியும். இதற்கு எல்லோரின் பங்களிப்பும் அவசியமானது. இன்று எல்லா ஊடகங்களிலும் பல்வேறு விதமான சமூக மேம்பாடு தொடர்பான செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இன்றும் இரண்டு படங்கள் வெளிவந்திருக்கின்றன. இவை அனைத்தும் மக்கள் மனங்களில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும்.

சிறுவர் துஷ்பிரயோகம், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் இவ்வாறான செயற்பாடுகள் எல்லாம் எங்கள் பாரம்பரியத்தை தொலைத்துவிட்டோமோ என்று எண்ணத் தோன்றுகின்றது' என்றார்.

இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம், யாழ். பல்கலைக்கழக உளவியல் துறைத் தலைவர் கலாநிதி கஜவிந்தன், யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எஸ்.ரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .