2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வடமாகாண மாணவர்களுக்கான கர்நாடக சங்கீத பயிற்சிப்பட்டறை

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 17 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

யாழ். நல்லூர் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு வட மாகாண கலாசார திணைக்களம், யாழ்.இந்தியத் துணை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இந்திய - இலங்கை நட்புறவு அமைப்பும் ஆகிய வற்றின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான கர்நாடக சங்கீத பயிற்சிப்பட்டறை இன்று வெள்ளிக்கிழமை யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றுள்ளது.

கர்நாடக இசைப் பயிற்சிப் பட்டறையில் தென்னிந்திய திரையிசைப் பாடகர் பி.உன்னிகிருஷ்ணன் கலந்தகொண்டு மாணவர்களுக்கு கர்நாடக சங்கீதம் பற்றிய விளக்கங்களையும் பயிற்சிகளையும் வழங்கினார்.

இதில் யாழ்.இராமநாதன் நுண்கலைக் கல்லூரி மாணவர்கள் உட்பட ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

அத்துடன் பிரபல நாட்டியப் பேரொளி அலர்மேல்வள்ளியின் நடன நிகழ்வும் இன்று மாலை நல்லூர் சங்கிலியன் தோப்பில் நடைபெறவுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .