2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நால்வர் விழா

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 26 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)


வவுனியா தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்த நால்வர் விழா வவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்தின் கலாசார மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வவுனியா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவின்போது, நான்கு நாயன்மார்களின் திருவிக்கிரகங்கள் ஆதிவிநாயகர் ஆலயத்தில் இருந்து விழா மண்டபத்திற்கு எடுத்துவரப்பட்டது.

இந்த விழாவில் தொடக்க உரையினை வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் வை.சத்தியநாதன் ஆற்றினார்.  சிறப்பு உரையினை வவுனியா  மெய்கண்டான் ஆதினத்தின் குருமகாசந்நிதானத்தின் ஸ்ரீலஸ்ரீ சிவக்கொழுந்து சிவதேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் 'வையகம் துயர் தீர்கவே' தலைப்பில் ஆற்றினார்.

அடுத்து கலா மண்டபம் நிறுவக் காரணமான அமரர் திருமதி பாலாம்பிகை தேவராசாவின் நினைவாக 'நால்வர் நற்றமிழ்;' என்ற தலைப்பில்; வவுனியா சேக்கிழார் மன்றத்தின் தலைவர் க.ஐயம்பிள்ளை தலைமையில் கருத்தரங்கமும் வவுனியா சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் அறநெறி பாடசாலை மாணவர்களின் நால்வர் சந்தித்தால் என்ற தலைப்பில்  வேடம் புனைந்து உரையாடலும் நடைபெற்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .