2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வேலணை ஒரு வரலாற்று அறிமுகம் நூல் வெளியீட்டு விழா

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 15 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரஜனி)

வேலணை வரலாற்று நூல் வெளியீட்டுச் சபையின் அனுசரணையில் முன்னாள் ஆசிரியரும் சமாதான நீதிவான் ச.மாணிக்கவாசகர் பதிப்புரையில் வேலணை ஒரு வரலாற்று அறிமுகம் என்ற நூல் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டத்தில் நடைபெற்றது.

முதலாவது பிரதியை பிரதம அதிதியாக கலந்துகொண்ட யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தினக்குரல் அதிபர் எஸ்.பி.சாமிக்கு வெளியிட்டு வைத்தார். அதனைத் தொடர்ந்து, முன்னாள் நீதிபதி இளஞ்செழியனுக்கு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சிறப்பு பிரதி வழங்கி வைத்தார்.

வாழ்நாட் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம் பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ். மாவட்ட உயர் நீதிமன்ற ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் மற்றும் முன்னாள் நீதிபதி இளஞ்செழியன், துர்க்கா தேவஸ்தான தலைவர் ஆறு. திறுமுறுகன் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் நீதிபதிகள் பலர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .