2025 மே 17, சனிக்கிழமை

மட்டக்களப்பில் புகைப்படக் கண்காட்சி

Kogilavani   / 2012 செப்டெம்பர் 19 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                 (ரி.லோஹித்)
விஞ்ஞான வழிகாட்டிகள் (Science Navigators) அமைப்பின் ஏற்பாட்டில் புகைப்படக் கண்காட்சியொன்று மட்டக்களப்பு மகாஜன கல்லூரிக் கலையரங்கில் நாளை வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 23 ஆகிய திகதிவரை நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வோரது விஞ்ஞான அறிவை விஸ்தரிக்கும் நோக்கோடு இங்கு வாழும் இளைஞர்கள் சிலர் இணைந்து ஏற்படுத்தியுள்ள ஒரு சங்கமே விஞ்ஞான வழிகாட்டிகள் (Science Navigators) என்பதாகும்.

இச் சங்கத்தில் மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், சட்டத்தரணிகள் எனப் பல்துறை சார்ந்தவர்கள் இணைந்து செயற்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

சுற்றுச்சூழல் தொடர்பான தெளிவையும் விளக்கத்தையும் வழங்கும் நோக்கலும்; மட்டக்களப்பில் அமைக்கப்படவுள்ள விஞ்ஞான வள நிலையத்திற்கான தேவைகளை நிறைவுசெய்வதற்காகவும் இக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.                      

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .