2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் குறுநாடகக் காட்சி

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 20 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்)


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குறுநாடகப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதல் 3 இடங்களையும் பெற்ற குறுநாடகங்கள் நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியிலும் கழுதாவளை மகாவித்தியாலயத்திலும் காண்பிக்கப்பட்டது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்டப் பணிமனையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறந்த இயக்கத்தில் முதலாமிடம் பெற்ற செல்வராசா லீலாவதி மற்றும் ரொணிகா சாமலீயின் குருடனும் நொண்டியும் இரண்டாமிடம் பெற்ற எம்.சீ.நஜிமுதீனின் சலோமி, மூன்றாமிடம் பெற்ற நெரஞ்சன் சந்ராதித்யவின் இராமனும் சீதையும் ஆகிய குறுநாடகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.ஜீ.ஏ.கபூர் தலைமையில் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைத்துறைத் தலைவர் பேராசிரியர் சி.மௌனகுரு, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே.தவராசா ஆகியோர் கௌரவ விருந்தினரர்களாக  கலந்து கொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .