2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது வழங்கும் விழா

Super User   / 2012 செப்டெம்பர் 23 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ். வதனகுமார், ஜிப்ரான்)


எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் 2011 ஆம் ஆண்டுக்கான தமிழியல் விருது வழங்கும் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை  முற்பகல் 10.00 மணிக்கு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டப வணபிதா சிறிதரன் சில்வஸ்டார் அரங்கில் இடம்பெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் செ.யோகராசா தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக இருதய நோய்க்கான வைத்திய ஆலோசகர் வைத்திய கலாநிதி கனகசிங்கம் அருள்நிதி கலந்துகொண்டதுடன் கௌரவ விருந்தினராக மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் கலந்து கொண்டார்.

விசேட அதிதியாக லண்டன நிதிப்பணிப்பாளரும் எழுத்தாளருமாகிய வவுனியூர் இரா.உதயணன், சிறப்பு அதிதியாக மூத்த ஊடகவியலாளர் இனிய வி.தேவராஜ், அழைப்பு அதிதியாக கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியகத் தலைவர் பொன்.செல்வநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய ஸ்தாபகர் ஓ.கே.பாக்கியநாதன் உயர் தமிழியல் விருது பேராசிரியர் சி.மௌனகுருவுக்கு வழங்கப்பட்டது. வவுனியூர் ஸ்ரீஇராமகிருஸ்ணா-கமலநாயகி தமிழியல் விருதானது சிவசெறிப்புரவலர் சீ.ஏ.இராமஸ்வாமி, கலாநிதி முல்லைமணி, சிற்பி.சி.சரவணபவன், திருமதி பத்மா சோமகாந்தன், திருமதி அன்னலெட்சுமி இராசதுரை ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இதேவேளை 2010 ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த நூல்களுக்கான தலா பத்தாயிரம் ரூபா பொற்கிழியுடன் தமிழியல் விருதுகள் வழங்கப்பட்டன.  அவற்றின் விபரம் பின்வருமாறு:

நாவல்: நாவலாசிரியை பவளசுந்தரம்பாள் தமிழியல் விருது 'அறுவடைக் கனவுகள்' நூலை எழுதிய இனிய.அல்-அஸூமத், பம்பைமடு கந்தையா-இரஞ்சிதமலர் தமிழியல் விருது காணா இன்பம் கனிந்ததேனோ...! நூலை எழுதிய இனியஆ.மு.சி.வேலளகன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறுகதை:
கல்விமான் க.முத்துலிங்கம் தமிழியல் விருது முக்கூடல் நூலை எழுதிய இனிய.க.சட்டநாதன் அவர்களுக்கும் பதிவாளர் நாயகம் எஸ்.முத்துக்குமாரன் தமிழியல் விருது ஒப்பாரிக் கோச்சி நூலை எழுதிய இனிய.மு.சிவலிங்கத்திற்கு வழங்கப்பட்டது.

கவிதை: புலவர்மணி ஆ.மு.சரிபத்தீன் தமிழியல் விருது அறியப்படாத மூங்கில் சோலை எனும் நூலை எழுதிய அமரர் சாருமதிக்கும் கவிஞர் கல்லாறன் மு.கணபதிப்பிள்ளை தமிழியல் சிறகு முளைத்த தீயாக...நூலை எழுதிய இனிய.மட்டுவில் ஞானக்குமாரன் (கனடா) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறுவர் இலக்கியம்: வ.இராசையா தமிழியல் விருது தங்கமீன் குஞ்சுகள் நூலை எழுதிய கிண்ணியா எஸ்.பாயிஸா அலிக்கு வழங்கப்பட்டது.

காவியம்: புலவாமணி பெரியதம்பிப்பிள்ளை தமிழியல் விருது தீரன் திப்பு சுல்தான் நூலை எழுதிய டாக்டா ஜின்னாஹ் சரிபுத்தீனுக் வழங்கப்பட்டது.

நாடகம்: கலைஞர் ஓ.கே.கணபதிப்பிள்ளை தமிழியல் விருது மனித தர்மம் நூலை எழுதிய கலைஞர் கலைச்செல்வனுக்கு வழங்கப்பட்டது.

மொழிபெயர்ப்பு:
செந்தமிழ்ச்செல்வர் சு.ஸ்ரீகந்தராஜா தமிழியல் விருது இப்படிக்கு அன்புள்ள அம்மா நூலை மொழிபெயர்த்த இனிய.வி.ஜீவகுமாரனுக்கு (டென்மார்க்) வழங்கப்பட்டது.

நாட்டுக்கூத்து: பம்பைமடு நாகலிங்கம் - நல்லம்மா தமிழியல் விருது மாவீரன் சங்கிலியன் நூலை எழுதிய இனிய.மு.அருள்பிரகாசத்திற்கு வழங்கப்பட்டது.

இலக்கிய ஆய்வு: வித்தியாகீர்த்தி ந.சந்திரகுமார் தமிழியல் விருது சூழ ஓடும் நதி நூலை எழுதிய கெகிறாவ ஸஹானாவுக்கு வழங்கப்பட்டது.

இசை ஆய்வு: சுவாமி விபுலானந்த அடிகளார் தமிழியல் விருது இசைத்தமிழின் தொன்மையும் திண்மையும் நூலை எழுதிய லயனல் திலகநாயகம் போல் - பத்தினியம்மா திலகநாயகம் போலுக்கு வழங்கப்பட்டது.

ஆய்வுக் கட்டுரை: புரவலர் ந.ஜெகதீசன் தமிழியல் விருது பண்டையத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும் நூலை எழுதிய நூணுவிலூர்.கா.விஜயரத்தினத்திற்கு (இங்கிலாந்து) வழங்கப்பட்டது.

பயணக் கட்டுரை:
அருட்கலைவாரி தி.சு.சண்முகவடிவேல் தமிழியல் விருது இந்திய உலா நூலை எழுதிய இனிய நிலாவுக்கு (இங்கிலாந்து) வழங்கப்பட்டது.

விமர்சனக் கட்டுரை:
சிவநெறிப்புரவலர் சீ.ஏ.இராமஸ்வாமி தமிழியல் விருது ஈழத்து கலை இலக்கிய உலகு நூலை எழுதிய கலாநிதி.கந்தையா ஸ்ரீகணேசனுக்கு வழங்கப்பட்டது

இன நல்லுறவு இலக்கியம்: வண பிதா சந்திரா அடிகளார் தமிழியல் விருது இனிய.தர்மசிறி பண்டாரநாயக்காவுக்கு வழங்கப்பட்டது.

குறும்படம்: துறையூர் வே.நாகேந்திரன் தமிழியல் விருது 'ஏடு' 'ஓநாய்கள் ஜடமாய்' க்கு வழங்கப்பட்டது.

ஓவியம்: ஓவியர் டாக்டர் கிக்கோ தமிழியல் விருது ஓவியர் எஸ்.டீ.சாமிவுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த வெளியீட்டகம்: புரவலர் எஸ்.சோலைமாலைத்தேவர், தமிழியல் விருது புரவலர் ஹாசிம் உமருக்கு வழங்கப்பட்டது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .