2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கண்டியில் மகாத்மா காந்தி சிரார்த்த தினம்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 19 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(மொஹொமட் ஆஸிக்)

இந்திய சுதந்திர போராட்டத்தின் தந்தையாக கருதப்படும் மகாத்மா காந்தியின் சிரார்த தினம் இன்று வெள்ளிக்கிழமை மாலை கண்டி ஈ.எல்.சேனாநாயக்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஷ்ணன், உதவி இந்திய உயர் ஸ்தானிகர் ஆறுமுகம் நடராஜன், இந்தியாவை சேர்ந்த கலாநிதி ஆனந்த ராமன் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

இலங்கையின் பல பாகங்களிலிருந்து நாட்டுக்கும் சமூகத்திற்கும் பாரிய சேவையாற்றிய கல்விமான்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், வைத்தியர்கள், வியாபாரிகள், சமூக சேவையாளர்கள் உற்பட பலர் இங்கு 'இரத்தின தீப' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவ்விழாவை ஒழுங்கு செய்வதில் இரத்தினதீப ஸ்தாபகர் ராஜா ஜேகின்ஸ் பாரிய பங்கை ஆற்றினார்.











You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .