2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

புலவர்மணி பெரியதம்பிபிள்ளையின் நினைவுதின நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 04 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


இலக்கிய கலாநிதி புலவர்மணி பெரிய தம்பிபிள்ளையின் 34ஆவது நினைவுதின வைபவம் மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

புலவர்மணி பெரிய தம்பிபிள்ளை நினைவுப்பணிமன்றத் தலைவர் சி.சந்திரசேகரம் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் நினைவுப் பேருரையை பேராசிரியர் சித்திரலேகா மௌனகுரு ஆற்றினார்.

கவிஞர்களான தேனுரான், எஸ்.புஷ்பரரி, கா.சிவலிங்கம் ஆகியோர் கவிதா நிகழ்வாற்றினர்.

இதன்போது புலவர்மணியின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .