2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

'துயரக்கடல்' கவிதை நூலுக்கு விருது

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 06 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
(எஸ்.கே,பிரசாத்)


கலை இலக்கியப் பேரவை யாழ். இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 2010ஆம் 2011ஆம் ஆண்டுகளின் சிறந்த நூல்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

யாழ். நாவலர் மண்டபத்தில் இந்நிகழ்வில் 2010ஆம் 2011ஆம் ஆண்டுகளில் வெளியான நூல்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.  2011ஆம் ஆண்டின் சிறந்த கவிதை நூலுக்கான பரிசும் கவிஞர் ஐயாத்துரை ஞாபகார்த்த விருதும் முல்லைத்தீவைச் சேர்ந்த கி.பி.நிதுன் எழுதிய 'துயரக்கடல்;' கவிதை நூலுக்கு வழங்கப்பட்டது

யுத்தம் இடம்பெற்றபோது முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் பட்ட அவலங்கள், இழப்புக்கள், போருக்குப் பின்னரான முகாம் வாழ்க்கை, மீள்குடியேற்றம்  போன்ற பல்வேறு விடயங்கள் இக்கவிதை நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளமையால் இக்கவிதை நூல் 2011ஆம் ஆண்டுக்கான கவிதை நூலாக தெரிவு செய்யப்பட்டது.


  Comments - 0

  • rafee Sunday, 03 February 2013 06:15 AM

    இன்று அவர் ஒரு இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .