2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

யாழில் முதலாவது ஜப்பானிய கலாசார நிகழ்வு

Super User   / 2012 நவம்பர் 07 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவராலயத்தின் ஏற்பாட்டிலான முதலாவது கலாசார நிகழ்வு இந்த மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

ஜப்பான் பவுண்டேசன் மற்றும் இலங்கை சிம்போனி ஒச்செஸ்ரா ஆகியவற்றுடன் இணைந்து கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவராலயத்தினால் இந்த கலாசார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கலாசார நிகழ்வுகள் இலங்கைக்கும் ஜப்பானிற்கும் இடையிலான இராஜதந்திர உறவு ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகள் பூhத்தியை முன்னிட்டு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய எனதும் எனது குடும்பத்தினதும் எனது நாயினதும் கதை எனப்படும் ஜப்பானிய வன்கோ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி யாழ். வீரசிங்க மண்டபத்தில் திரையிடப்பட்டவுள்ளது.

அத்துடன், இலங்கை சிம்போனி ஒச்செஸ்ராவினால் எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதி யாழ். வீரசிங்க மண்டபத்தில சாஸ்திரிய சங்கீத நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, நம்வம்பர் 27ஆம், 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளிலும் ரண்டூக செயலமர்வும் ஜாஸ் நிகழ்வுகளும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. அத்துடன் இதன் சில நிகழ்வுகளை கொழும்பில் நடத்துவதற்காகன ஏற்பாடுகளையும் கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவராலயம் மேற்கொண்டுள்ளது.

கொழும்பு மற்றும் யாழ்பாணம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள கலாசார நிகழ்வுகள் இலங்கை தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஜப்பானிய முயற்சிகளுக்கு உதவியாக இருக்கும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .