2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நவீன முகாமைத்துவ நடைமுறைகள் எனும் நூல் வெளியீடு

Super User   / 2012 டிசெம்பர் 02 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ முன்னாள் பீடாதிபதி வல்லிபுரம் கனகசிங்கம் எழுதிய நவீன முகாமைத்துவ நடைமுறைகள் எனும் நூல் வெளியீடு இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு சிவில் சமூக தலைவர் கலாநிதி கே. பிறேம்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா, கிழக்கு மாகாண விவசாய, அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி நூல் வெளியீட்டுட்டு நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம். உதயகுமார், கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட பீடாதிபதி பேராசிரியர் எம். செல்வராஜா, விஞ்ஞான பீட பீடாதிபதி கலாநிதி எம்.வினோபவா, சௌக்கிய பராமரிப்பு பீட பீடாதிபதி வைத்திய கலாநிதி கே.ஈ. கருணாகரன், விவசாய பீட பீடாதிபதி கலாநிதி சோ. சுதர்சன் மற்றும் வர்த்தக முகாமைத்துவ பீட பீடாதிபதி ந. லோகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .