2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

அம்மா...

Super User   / 2013 மார்ச் 14 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அன்பின் இலக்கணம்
அம்மா எந்தன் அம்மா

உடலொன்று தந்தாள்
உயிர் கொஞ்சம் தந்தாள்
சுகமொன்றை சுமையாக்கி
சுமையொன்றில் சுகமீட்டினாள்

அடையாளம் நீ தந்த
என் முதன் வார்த்தை
அம்மா எந்தன் அம்மா

முதன் உணர்வாய்
முதன் உலகாய்
முதன் உயிராய்
இருந்தவள் அம்மா
எந்தன் அம்மா

கருவாக நானிருக்க
மெதுவாக படுத்திருந்து
இரவாக முழித்திருந்த
சூரியனே அம்மா
எந்தன் அம்மா

நீரோடை தவள்கின்ற சுழழ் காற்றும்
பாலைவன வீசுகிற மண் காற்றும்
குதிரைக் குழம்புகள் எழுப்புகிற அனல் காற்றும்
உன் வலிகண்டு அடங்கி விடும்
அம்மா எந்தன் அம்மா

அக்கினியில் பூத்த பூவே
சுக்கிரனும் கண்டு வியக்கும்
பக்குவமாய் நீராட்டினாய்
அம்மா எந்தன் அம்மா

பாஹிம் முஹம்மட்

  Comments - 0

  • shatheer Thursday, 14 March 2013 06:52 AM

    இவரு நல்ல நடிகன். இவரு மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .