2025 ஜூலை 05, சனிக்கிழமை

'மட்டு' காணொளி இறுவெட்டு வெளியீடு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 29 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு கலைஞர்கள் பலர் ஒன்றிணைந்து கூட்டாக தயாரித்துள்ள  'மட்டு' காணொளி பாடல் இறுவெட்டு வெளியீடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (1) மாலை கல்லடியில் இடம்பெறவுள்ளது.

கல்லடி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணியளவில் இந்த இறுவெட்டு வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பை சேர்ந்த கலைஞர், துஷியின் தயாரிப்பில் வெளிவரவுள்ள இந்த காணொளி இறுவெட்டு தயாரிப்பில் மட்டக்களப்பு கலைஞர்கள் பங்குபற்றியுள்ளனர்.

எம்மவர்களின் படைப்புக்கு ஆக்கமும் ஊக்கமும் படைத்து எமது மண்ணை பெருமையடையசெய்யவேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது. எனவே இந்த வெளியீட்டு நிகழ்வில் கலந்து சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்'  என விழா ஏற்பாட்டுக் குழவின் அழைப்புவிடுத்துள்ளனர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .