2025 ஜூலை 05, சனிக்கிழமை

'தெய்வீக சுகானுபவம்' யாழில் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 05 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்,சுமித்தி தங்கராசா


யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு யாழ். இந்திய துணைத் தூதரகமும் வடமாகாண கல்விப் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடத்திய இரண்டாவது 'தெய்வீக சுகானுபவம்' யாழ். சங்கிலியன் தோப்பில் நேற்று புதன்கிழமை  நடைபெற்றுள்ளது.

வடமாகாண கல்வி விளையாட்டு மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சிங்ஹா கலந்துகொண்டார்.

நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற கலை நிகழ்வில் புகழ்பெற்ற பரத நாட்டிய கலைஞர் செல்வி லீலா சாம்ஸனின் பரதநாட்டியம்  நடைபெற்றுள்ளது.

மேலும், நேற்றையதினம் காலை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் லீலா சாம்ஸனின் நுண்கலை மாணவர்களுக்கான பயிலரங்கு ஒன்றும் நடைபெற்றுள்ளது.

இன்று வியாழக்கிழமை பிரபல கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதனின் மாணவர்களுக்கான பயிலரங்கும் மாலை சங்கிலியன் தோப்பில் இசைக்கச்சேரியும் இடம்பெறவுள்ளது.










You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .