2025 மே 08, வியாழக்கிழமை

நாட்டுக்கூத்து நிகழ்வு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 06 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


அருகிவரும் கலையான நாட்டுக் கூத்துக் கலையை மக்களிடையே அறிமுகம் செய்யும் நோக்கில் வாழைச்சேனை பிரதேச செயலக கலாசாரப் பேரவை ஏற்பாடு செய்த நாட்டுக் கூத்து நிகழ்வு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை அந்தப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கந்தையா ரட்ணபிள்ளையின் ஏற்பாட்டில் கிண்ணயடி ஹம்சத்வணி கலைமன்ற உறுப்பினர்களால் 'வள்ளி' என்ற தலைப்பில் நாட்டுக் கூத்து மேடையேற்றப்பட்டது.

பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ், உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன், நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.றஹீம் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X