2025 மே 08, வியாழக்கிழமை

கலாசார விழா

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 08 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, படுவான்கரைப் பகுதியில் உள்ள மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டிலான பிரதேச கலாசர விழா இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இந்தக் கலாசார விழா நடைபெற்றது.

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின் பிரதேச செயலாளரும் பிரதேச கலாசாரக் குழுத் தலைவருமான சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜீ.சிறிநேசன், கோட்டக்கல்வி அதிகாரி என்.தயசீலன், வேள்விஷன் லங்கா பட்டிப்பளை பிராந்திய முகாமையாளர் ஜீ.ஜே.அனுராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது இந்தப் பிரதேச மட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட நாட்டுக்கூத்து, நாட்டியம் போன்ற கலைத்துவப் படைப்புக்களும் மேடையேற்றப்பட்டன.

பிரதேச மட்டத்தில் நடைபெற்ற  கலாசாரப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் கலைஞர்களுக்கும் பரிசில்களும் கேடயங்களும் வழங்கப்பட்டன.

மேலும், பிரதேசத்தில் சோதிடம், மாந்தரீகம், வாகடம் போன்ற சேவைகளை ஆற்றியமைக்காக  கதிர்காமம்போடி தம்பிப்போடிக்கும் நாட்டு மகப்பேற்று வைத்திய சேவை ஆற்றியமைக்காக திருமதி மாணிக்கம் அழகிப்போடிக்கும் நாட்டுக்கூத்தில் சிறந்து விளங்கியமைக்காக கதிர்காமம்போடி சின்னத்தம்பிக்கும் இளம் கூத்துக் கலைஞர் மகேந்திரன் கேதிஸ்வரனுக்கும் கேடயங்கள் மற்றும் வாழ்த்துப்பாக்கள் வழங்கப்பட்டதுடன், பொன்னாடைகள்  போர்த்தியும் கௌரவிக்கப்பட்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X