2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான வீதி நாடகங்கள்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக வீதி நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள், சிறுவர்களின் கல்வி மேம்பாடு குறித்த விடயங்களை சித்தரிக்கும் வகையில் இந்த வீதி நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக, காத்தான்குடி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை சிறுவர் நாடகமொன்று அரங்கேற்றப்பட்டது.

காத்தான்குடி பிரதேசத்தில் செயலகத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர் தலைமையில் நடைபெற்ற இந்த வீதி  நாடகத்தில் காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கலாசார உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

பிரதேசத்திலுள்ள கலைஞர்களை கொண்டு பிரதேச செயலகங்களின் எற்பாட்டில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சினால் இந்த வீதி நாடகங்கள் நடத்தப்படுகின்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .