2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கலை இலக்கியப் பெருவிழா

Kogilavani   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் கலை இலக்கியப் பெருவிழா நாளை வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு மட்.சுவாமி விபலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இதன்போது கடந்த 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் நூல்களுக்கான விருதுகள் வழங்கப் படவுள்ளதோடு, 2013 ஆம் ஆண்டுக்கான 'வித்தகர் விருது' வழங்கல் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் டி.டபிள்யூ.யு. வெலிக்கல்லவின் தலைமையில் நடைபெற்வுள்ள இவ்விழாவிற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் காணி, காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சர் விமலவீர திசாநாயக்க, ஜனாதிபதியின் ஆலோசகர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.சரத் அபயகுணவர்த்தன, கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் காணி, காணி அபிவிருதி போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஏ.ஏ.புஷ்பகுமார, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், கிழக்கு மாகாண பேரவைச் செயலாளர் கே.கரணாகரன், கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் டக்ளஸ்.ரணசிங்க, உட்பட கலைஞர்கள் கல்விமான்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள் என பலர் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .