2025 நவம்பர் 22, சனிக்கிழமை

'இதய தாகம்' நூல் வெளியீடு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 11 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா முத்தையா மண்டபத்தில் திருமதி மேரி மெக்டலீன் ஜெக்கெனடியின் இதயத் தாகம் கவிதை நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது.

ஒவ்வொரு மனிதர்களின் உள்ளக் கிடைக்களிலும் உள்ள எதிர்பார்ப்பு, ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய ஆசிரியை திருமதி மேரி மெக்டலீன் ஜெக்கெனடி அவர்களால் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.

நூலினை வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராஜா வெளிட்டு வைக்க உதவிக் கல்விப் பணிப்பாளர் செல்வி எஸ். கந்தையா பெற்றுக்கொண்டார்.

இந் நிகழ்வில், வடமாகாணசபை உறுப்பினர் ம. தியாகராஜா, வவுனியா தெற்கு உதவிக்கல்விப் பணிப்பாளர் கி.உதயகுமார், நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய அதிபர் சு. அமிர்தலிங்கம், பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் சி.அமல்ராஜ் உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X