2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பு மாவட்ட இலக்கிய விழா

Kogilavani   / 2013 நவம்பர் 11 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்ட இலக்கிய விழா நாளை (12) செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு மட்டக்களப்பு வேதநாயகம் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. 

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் விஜித் கணுகல, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன், மண்முனை மேற்கு வி.தவராசா, சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கே.பிறேமகுமார், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் மேலதிக அரசாங்க அதிபர் ஏ.அப்துல் அஸீஸ், எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, ஆகியோர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகௌ;ளவுள்ளனர்.

இந்நிகழ்வில் கிராமியப் பாடல்கள், கோலாட்டம், களிகம்பு, கவிதை பாடல், சிறுவர் நடனம் போன்ற பல கலாசார நிகழ்வுகள்; நடைபெறவுள்ளதோடு கலைஞர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

இதேவேளை, 'எழுகதிர்' எனும் சிறப்பு நூல் வெளியீடும் நடைபெறவுள்ளது. இந்நூலின் நயவுரையினை பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வடகிழக்கு மகாண முன்னாள் உதவிப் பணிப்பாளர் எஸ்.எதிரிமன்னசிங்கம் நிகழ்த்தவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .