2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

குறும்படங்கள் மற்றும் இசை காணொளிகளின் வெளியீடு

Kogilavani   / 2013 நவம்பர் 11 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்


மட்டக்களப்பை சேர்ந்த இளம் படைப்பாளிகளால் உருவாக்கப்பட்டுள்ள குறும்படங்கள் மற்றும் இசை காணொளிகளின் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு கோப் சென்றர் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் நேர்கோடு, Suicide, நரகம், வண்ண ஓவியம் ஆகிய குறும்படங்களும் மட்டு, காதல் சொன்னேன் ஆகிய இசை காணொளிகளும் திரையிடப்பட்டு வெளியிடப்பட்டன.

மட்டக்களப்பின் வரலாற்றில் முதல் முறையாக படைப்பாளின் குறும்படங்கள் மற்றும் இசை காணொளிகளின்; ஐந்து வெளியீடுகள் ஒரே தடவையில் இடம்பெற்றது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மலர்ச்செல்வன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .