2025 மே 08, வியாழக்கிழமை

மௌனத்தின் பின்னரான கவிதை நூல் வெளியீடு

Kogilavani   / 2013 நவம்பர் 19 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


நிகழ்காலம் சஞ்சிகையின் ஆசிரியர் நாசிக் மஜீதின் மௌனத்தின் பின்னரான கவிதை நூல் வெளியீடு நேற்று நூலாசிரியர் நாசிக் மஜீத் தலைமையில் கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக திருகோணமலை மாவட்;;ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இவர்களுடன் அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் கிண்ணியா கிளை தலைவர் ஹிதாயதுள்ளாஹ், கிண்ணியா நகரசபை பிரதி தவிசாளர் எம்.சி.சபறுள்ளாஹ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இவ்வெளியீட்டு நிகழ்வின் போது கிண்ணியா எழுத்தாளர்கள், கவிஞர்கள், வெளி மாவட்டங்கிளிலிருந்து வருகை தந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X