2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஏழிசை மிருதங்க நர்த்தனாலயத்தின் கலை விழா

Kogilavani   / 2014 பெப்ரவரி 06 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


யாழ். அரியாலை ஏழிசை மிருதங்க நர்த்தனாலயத்தின் கலை விழா சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் புதன்கிழமை (05) பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது.

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் ச.லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறைத் தலைவர் பேராசிரியர் மா.வேதநாதன், சிறப்பு விருந்தினர்களாக கலாகீர்த்தி சாந்தினி சிவனேசன், தண்ணுமை வேந்தன் ம.சிதம்பரநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, யாழ். பல்கலைக்கழக மிருதங்க விரிவுரையாளர் நல்லை க.கண்ணதாசன், சுண்டுக்குளி மகளிர் கல்லூரி நடன ஆசிரியை பாலினி கண்ணதாசன் ஆகியோரது நெறிப்படுத்தலில் சாஸ்த்திரிய நடனம், மிருதங்கக் கலை ஆற்றுகைகள் மற்றும்  நாதசங்கமம் என்ற இசை நிகழ்வும் நடைபெற்றன. இந்நிகழ்வில் கலையார்வலர்கள் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X