2025 மே 07, புதன்கிழமை

பௌர்ணமி கலைவிழா

Kogilavani   / 2014 பெப்ரவரி 15 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ். பாக்கியநாதன்


பாரம்பரிய கலை நிகழ்வுகளைப் பேணிப்பாதுகாக்கும் நோக்கோடு மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பௌர்ணமி கலைவிழா நேற்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டச் செயலக கலாசார உத்தியோகத்தர்  எஸ்.மலர்ச்செல்வன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவுக் கலைஞர்களின்  கரகாட்டம், கோலாட்டம் மற்றும் தென்மோடி நாட்டுக் கூத்து என்பன இடம்பெற்றன.

மாவட்ட மேலதிக அரச அதிபர் எஸ்.கிரிதரன், உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன் மற்றும் கிரான் பிரதேச செயலாளர் கே.தனபாலசிங்கம் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு பௌர்ணமியின் போதும் மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கலைஞர்களின் பாரம்பரிய கலை நிகழ்வுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X