2025 மே 07, புதன்கிழமை

துரைவி விருது வழங்கும் விழா

Kogilavani   / 2014 பெப்ரவரி 28 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

துரைவி விருது வழங்கும் விழாவும் 83ஆவது பிறந்த தின நினைவுப்பேருரையும் நாளை சனிக்கிழமை(01) பிற்பகல் 4.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் இடம்பெறவுள்ளது.

எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் வரவேற்புரையை கவிஞர் மேமன்கவியும்  நினைவுப்பேருரையை 'இலக்கியத்தில் இணையம்' என்ற தலைப்பில் இலங்கை ஊடகவியல் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி.தேவகௌரி ஆற்றவுள்ளார்.

இதேவேளை, தமிழகத்தில் விஷ்ணுபரம் விருது பெற்ற  எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பிற்கான பாராட்டும் இடம்பெறவுள்ளது. பாராட்டுரையை 'மல்லியப்பு சந்தி' திலகர் ஆற்றவுள்ளார்.

நன்றியுரையை ராஜ்பிரசாத், துரைவிஸ்வநாதன் ஆகியோர் ஆற்றவுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X