2025 நவம்பர் 22, சனிக்கிழமை

ஆனந்த சாரங்கம் இசை விழாவும் மலர் வெளியீடும்

Kogilavani   / 2014 ஜூன் 13 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


நல்லூர் சாரங்கம் இசைமன்றத்தின் ஏற்பாட்டில் 'ஆனந்த சாரங்கம்' இசை விழாவும் மலர் வெளியீடும் நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் வியாழக்கிழமை (12) இடம்பெற்றது.

செஞ்சோற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இந்த இசை விழாவில் பிரதம விருந்தினராக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மு.திருநாவுக்கரசு கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் ஆனந்த சாரங்கம் என்ற நூலினை பிரதம அதிதி வெளியிட்டு வைக்க, கல்விக்காருண்யன் தொழிலதிபர் ஈ.எஸ்.பி.நாகரத்தினம் பெற்றுக்கொண்டார்.

நூலிற்கான அறிமுகவுரையை கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் ச.லலீசன் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில், யாழ்;ப்பாணப் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா, சங்கீத வித்துவான் ஏ.கே.கருணாகரன் கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலய அதிபர் எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

திருமதி வாசஸ்பதி ரஜீந்திரன், சிறுவயதில் காலமாகிய தனது ஏகபுத்திரி சாரங்கியின் நினைவாக 1991 ஆம் ஆண்டில் சாரங்கம் இசை மன்றத்தினை நிறுவி, அங்கு 100 வரையிலான மாணவர்களுக்கு இலவசமாக இசையினைப் போதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X