2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

பிரதேச செயலக கலை மன்றங்களின் கலை சங்கம நிகழ்வு

Kanagaraj   / 2014 ஜூன் 29 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-
ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று, செங்கலடி பிரதேச செயலக கலை மன்றங்கள் இணைந்து வழங்கிய கலை சங்கம நிகழ்வு தன்னாமுனை பொன்தானா மண்டபத்தில் சனிக்கிழமை (28) நடைபெற்றது.

பிரதேச செலாளர் யூ. உதயஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற கலைத்துறைப் பேராசிரியர் எஸ். மௌனகுரு, மாவட்ட செயலக கலாசார இணைப்பாளர் கே. மலர்ச்செல்வன், ஏறாவூர்ப்பற்று செங்கலடி உதவிப் பிரதேச செயலாளர் நவரூபரஞ்சனி முகுந்தன், பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் நவவதனி சசிதரன், கலாசார உத்தியோகத்தர் எம்.சிவானந்தன் உள்ளிட்ட பலர்; கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பாரம்பரிய மற்றும் நவீன கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்துடன் கலைப்பணிகளில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ளோருக்கு அதிதிகள் நினைவுப் படிகங்களை வழங்கினர்.

நாடகத்துக்காக சுதாகரி மணிவண்ணன், நடனம் எஸ். மிதுலா, நாட்டுக் கூத்து கந்தையா வேலுப்பிள்ளை, நடன இயக்குநர் எஸ். கிருஷ்ணப்பிள்ளை, குறுந்திரைப்பட இயக்கம் ரீ. விதுர்ஷன், இலக்கியம் எஸ். சண்முகம், அறிவிப்பு ஏ. சதானந்தராஜா ஆகியோர் நினைவுப் படிகம் வழங்கி, பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .