2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

சி.வி. ஜனன தின நூற்றாண்டை முன்னிட்டு நூல் வெளியீடு

Kogilavani   / 2014 ஜூலை 09 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஞ்ஜன்

மலையக இலக்கிய முன்னோடியும் கவிஞருமான அமரர் சி.வி. வேலுப்பிள்ளையின் ஜனன தின நூற்றாண்டை   முன்னிட்டு எழுத்தாளர் சாரல் நாடன் எழுதிய  அமரர் சி.வி. தொடர்பான நூல் வெளியீடு எதிர்வரும் 12 ஆம்; திகதி சனிக்கிழமை ஹட்டன் – டிக்கோயா நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஹட்டன்  சங்கமம் கலை இலக்கியப் பேரவையின் சார்பில் பிரபல எழுத்தாளர் மு.நேசமணி ஏற்பாடு செய்துள்ள இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் முன்னாள் கல்விப் பணிப்பாளரும் விமர்சகருமான கே.மெய்யநாதன் தலைமை தாங்குவார்.

இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.இராஜாராம்;, ஹட்டன் – டிக்கோயா நகரபிதா டாக்டர் அழகமுத்து நந்தகுமார், உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது,  க.பொ.த. உயர் தர வகுப்பு மாணவர்கள் நூல் தொடர்பான விமர்சன உரைகளை நிகழ்த்த உள்ளனர்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .