2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

நாட்டார் பாடலில் வெற்றியீட்டிய மாணவர்கள் கௌரவிப்பு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 24 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


2014ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட தமிழ்த்தின போட்டியில்; நாட்டார் பாடலில் வெற்றியீட்டிய மாணவர்கள் இன்று வியாழக்கிழமை கௌரவிக்கப்பட்டனர்.

வெற்றி பெற்ற மாணவர்களும் பயிற்றுவித்த ஆசிரியர்களும் இன்னிசை வாத்தியங்கள் முழங்க வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்துக்கு அழைத்து வரப்பட்டு, கௌரவிக்கப்பட்டனர்.

இவர்களுக்கான பதக்கங்கள், நினைவுப்பரிசில்கள் பாடசாலை அதிபர் எம்.எஸ்.பத்மநாதனால் வழங்கப்பட்டது.

இதன்போது வெற்றி பெற்ற மாணவர்களான பா.மனோஜ்பாரத், ஜெ.ராஜ்கீரன், ஞா.உமாசுதன், ச.தருக்சன், ஜெ.ருக்சிகா, ம.மரியலக்சிகா ஆகியோரும் பொறுப்பாசிரியர் இராசலிங்கம் பிரபு, உதவி ஆசிரியை  பேபி யோசப்பின் கருணாகரன் ஆகியோரும்   கௌரவிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X