2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

கண்ணகி இலக்கிய விழாவை திருகோவில் நடத்த ஏற்பாடு

Gavitha   / 2014 ஜூலை 29 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.சுகிர்தகுமார், எஸ்.கார்த்திகேசு


கிழக்கு மண்ணில் தடவையாக நடத்தப்படும்; கண்ணகி இலக்கிய விழா, திருகோவில் பிரதேசத்திலுள்ள தம்பிலுவில் கிராமத்தில் ஓகஸ்ட் மாதம் 01ஆம், 02ஆம், 03ஆம் ஆகிய மூன்று தினங்களும் நடைபெறும் என்று விழாக்குழுத் தலைவர் வ.ஜயந்தன் தெரிவித்தார்.

திருக்கோவில் பிரதேசத்தின் கண்ணகி இலக்கிய விழா தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் விழாக்குழுத் தலைவரின் இல்லத்தில் இன்று பிற்பகல் (29) நடைபெற்றது.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கில் மண்ணில், முதலாவது கண்ணகி கலை இலக்கிய விழா 2011இல் மட்டக்களப்பு மகஜன கல்லூரியிலும் இரண்டாவது விழா 2012இல் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பிலும், 3ஆவது விழா, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கடந்த வருடமும் நடைபெற்றது.

4ஆவது விழாவில் பல்வேறு அறிஞர்கள், ஆய்வாளர்கள், சொற்பொழிவாளர்கள் என பலரும் கலந்து கொண்டு கண்ணகியின் வரலாறு பற்றி உரையாற்றவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X