2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

திரை விலகு​ம் போது​...

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 06 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


சூரியன் FMஇன் முன்னாள் அறிவிப்பாளரும், தற்போதைய சூரியன் FM பணிப்பாளர் A.R.V.லோஷனின் சகோதரருமான A.R.திருச்செந்தூரன் எழுதிய வானொலி, மேடை நாடகங்களின் தொகுப்பு நூலான 'திரை விலகு​ம் போது​' ​நூல் ​வெளியீட்டு விழா, எதிர்வரும் சனிக்கிழமை (09.08.2014) மாலை 5.30க்கு கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
 
திருச்செந்தூரன் எழுதி, சூரியன் வானொலியில் முன்பு 'அரங்கம்' நிகழ்ச்சியில் ஒலிபரப்பான நாடகங்கள், மற்றும் மேடை நாடகங்களில் பிரபலமான தெரிவுசெய்யப்பட்ட நாடகங்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. 
 
இந்நிகழ்வில் முன்னாள், இந்நாள் ஒலிபரப்பாளர்கள் மற்றும் ஊடகப் பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X