2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

இளைஞர் விருதுப் போட்டிக்கான விண்ணப்பம் கோரல்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 11 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் 2014 ஸ்ரீலங்கா யூத் தேசிய விருதுப் போட்டியின் மாவட்ட மட்டப் போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட மட்டத்திலான போட்டிக்கான விண்ணப்பப் படிவங்களை மட்டக்களப்பு மாவட்டப் பணிமனை, பிரதேச செயலகங்கள், இளைஞர் சேவை அதிகாரிகளிடம்; இருந்து பெற்றக்கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இப்போட்டியானது, தமிழ்,சிங்களம்,ஆங்கில மொழிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காகவும்  (Differently Abled) நடாத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழ் மொழியில் அறிவிப்பாளர், பேச்சு, இளம் பாடகர், கிராமியப் பாடல், கிராமிய நடனம், புத்தாக்க நடனம் மற்றும் சாகித்திய(இலக்கிய) போட்டிகளான நாவல், சிறுகதை, கடடுரை, பாடல் இயற்றல், வானொலி நாடகம், தொலைக்காட்சி நாடகம், சிறுவர் இலக்கியம் (கவிதை, கதை) போன்ற போட்டிகளுக்கும் தமிழ், சிங்கள் மொழிகளில் பொதுப் போட்டிகளாக பரத நாட்டியம், கதக், அபிநய நாடகம், சாஸ்திரிய இசை, மேலைத்தேய இசை, சித்திரம், புகைப்படம், சிற்பங்கள் போன்ற போட்டிகளுக்கும் ஆங்கில மொழியில் அறிவிப்பாளர், பேச்சு, இளம் பாடகர் போட்டிகளுக்கம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதேவேளை, மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ் மொழிப் போட்டிகளாக புத்தாக்க நடனம், அறிவிப்பாளர், பேச்சு, இளம் பாடகர், நாட்டார் பாடல் போன்ற போட்டிகளும் தமிழ், சிங்கள பொதுப் போட்டிகளாக சாஸ்திரிய இசை, மேலைத்தேய இசை, சித்திரம், புகைப்படம் சிற்பங்கள் போன்றவற்றிற்கும் விண்ணப்பங் கோரப்பட்டுள்ளதாக  உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இப் போட்டிகளுக்கு 15 முதல் 29 வயதுககு;பட்ட இளைஞர் யுவதிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்த அவர் நாடகப் பிரிவுப் போட்டிகளுக்கு 15 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளதுடன் மேலதிக விபரங்களுக்கு 0652224367 என்ற தோலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கோரியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .