2025 நவம்பர் 22, சனிக்கிழமை

நினைவுகளும் கனவுகளும் நூல் வெளியீடு

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 21 , மு.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


வே.சு.கருணாகரன் எழுதிய “நினைவுகளும் கனவுகளும்” எனும் நூல், ஞாயிறன்று கதிரேசன் மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. 
 
இந்து சமயக் கலாசாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்கள்.
 
உயர் வழக்குரைஞர் கே.வி.தவராசா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நூல் ஆய்வினை சட்டத்தரணி காண்டீபனும் நூல் மதிப்பீட்டை எழுத்தாளர் முஸ்டீனும் செய்தார்கள்.
 
மனவளக்கலைப் பேராசிரியர் சி.முருகானந்தவேல் வாழ்த்துரை நிகழ்த்த, நூலின் முதற்பிரதியினை இராசரெத்தினம் விஜயகுமார் பெற்றுக் கொண்டார்கள். இந்நிகழ்வை எழுத்தாளரும் அறிவிப்பாளருமான தம்பிஐயா தேவதாஸ் தொகுத்து வழங்கினார்கள்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X