2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

தெய்வீக சுகானுபவம் கலாசார விழா

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்


யாழ். இந்தியத் துணைத்தூதரகம், புதுடெல்லியிலுள்ள கலாசார உறவுகளுக்கான இந்தியப்பேரவை, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம், இந்திய இலங்கை அறக்கட்டளை மையம் மற்றும் வடக்கு மாகாணசபையின் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை என்பன இணைந்து நடத்தி தெய்வீக சுகானுபவம் கலாசார விழா ஞாயிற்றுக்கிழமை (24) காலை   ஆரம்பமாகியது.

இதன் ஒரு அம்சமாக நீராவியடியிலுள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் பரதநாட்டிய பயிற்சிப்பட்டறைஇடம்பெற்றது.

இந்தப் பயிற்சிப் பட்டறையை, பிரபல பரத நாட்டியக் கலைஞர் லாவண்யா ஆனந்த் நடத்தினார்.

தொடர்ந்து இன்று மாலை, நல்லூர் சங்கிலியன் தோப்பில் பரதநாட்டிய ஆற்றுகை இடம்பெறவுள்ளது.

திங்கட்கிழமை (25) காலையில் கர்நாடக சங்கீத பயிற்சிப்பட்டறை நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியிலும் மாலை கர்நாடக சங்கீத இசைக்கச்சேரி சங்கிலியன் தோப்பிலும் இடம்பெறவுள்ளன. இதனை வு.ஏ.ராம்பிரசாத் நடத்தவுள்ளார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .