2025 மே 14, புதன்கிழமை

நிகழ்த்தவுள்ள கின்னஸ் சாதனை தொடரப்பில் விளக்கம் : அனிஸ்டஸ் ஜெயராஜா

Gavitha   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்

திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா (56) தான் நிகழ்த்தவுள்ள கின்னஸ் சாதனை முயற்சி தொடர்ப்பில் ஊடகவியாலாளர்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (24)  திருகோணமலை நகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் வைத்து விளக்கமளித்தார்

இதன் போது இவர் கூறுகையில்,

'உலகில்  பல கின்னஸ் சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கும் போதும் இலக்கித்துறை சார்ந்த கின்னஸ்  சாதனைகள் பெருமளவில் நிகழ்த்தப்படாத நிலையில், இந்த துறையில் சாதனையை நிகழ்த்தி திருகோணமலை மாவட்டத்துக்கு  கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்க்கும்  முயற்சியை மேற்கொள்ளவுள்ளேன்' என்று அனிஸ்டஸ் ஜெயராஜா தெரிவித்தார்.

திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியின் பழைய மாணவர் என்பதனால் அப்பாடசாலையில் எதிர்வரும் 30.08.2014 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் மாலை 8.00 வரை உணவு, குடிநீர், ஓய்வும் இன்றி தொடர்சியாக  12 மணி நேரம் எழுதியே இச்சாதனையை நிகழ்த்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது, முதல் 04 மணித்தியாலம் எழுத்தும் எனது வாழ்வும் எனும் தலைப்பிலும் அடுத்து வரும் 04 மணித்தியாலங்கள் எனது வாழ்வும் உங்கள் கரண்சியும் எனும் தலைப்பிலும் இறுதி 04 மணித்தியாலங்கள் கரண்சி இல்லாத உலகம் எனும் தலைப்பிலும் எழுதவுள்ளார்.

இதுவரை  27 நூல்களை எழுதியுள்ள இவர் 25 நூல்களை இதுவரை வெளியிட்டுள்ளார். இதில் குறுநாவல், சமூகநாவல் மற்றும் கட்டுரை நூல்களை வெளியிட்டுள்ளார்.  இவருடைய முதலாவதான சேகுவரா நூலை 1979 ஆண்டு வ.அ. இராசரத்தினம் தலைமையில் திருகோணமலையில் வெளியிட்டு வைத்துள்ளார். தனது இலட்சியம் 1000 நூல்களை ஒரே மொழியில் எழுதி வெளியிட வேண்டும்' என்பதாகும் என அவர் ஊடகவியலாளர் கலந்தரையாடலில் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .