2025 நவம்பர் 22, சனிக்கிழமை

'என் விழி வழியே' நூல் வெளியீடு

George   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


மட்டக்களப்பு அம்பிளாந்துறை இந்து இளைஞர், அறநெறிப் பாடசாலை ஏற்பாட்டில் ஆசிரியர் அழகுதனுவின் 'என் விழிவழியே' கவிதைத் தொகுப்பு நூல் மற்றும் 'எங்கே அப்பா' குறும்பட இறுவெட்டு வெளியீட்டு விழாவும் அம்பிளாந்துறை மகா வித்தியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்றது.
 
அம்பிளாந்துறை அறநெறிப் பாடசாலை அதிபர் செ.நகுலேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதிதிகளாக கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர் சு.சந்திரகுமார், பட்டிப்பளை கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.தயாசீலன், பட்டிப்பளை பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் திருமதி.வளர்மதிராஜ், பிரதேச செயலக இந்து கலாச்சார உத்தியோகத்தர் செல்.வி.த.மேகலா, பிரதேச செயலக கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ஐயந்தா அரங்கன், கல்லடி காயத்திரி பீட பிரதமகுரு சிவயோகச் செல்வன் த.சாம்பசிவம் சிவாச்சாரியார் மற்றும் பிரதேச பாடசாலை அதிபர்கள், பிரதே கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
இதன்போது நந்திக் கொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது. ஆசியுரையினை கல்லடி காயத்திரி பீட பிரதமகுரு சிவயோகச் செல்வன் த.சாம்பசிவம் சிவாச்சாரியாரும் நூல் அறிமுக உரை ஆசிரியர் ம.ஜீவரெட்ணமும் நூல் நயப்புரை கச்சக்கொடி சுவாமிலை பாடசாலை அதிபர் கவிஞர் மு.குணரெத்தினமும் குறும்பட நயப்புரை கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர் சு.சந்திரகுமார் மற்றும் ஏனைய அதிதிகளால் நிகழ்த்தப்பட்டன.
 
நூல் மற்றும் குறும்பட இறுவெட்டு வெளியீட்டின் முதல் பிரதியினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
 
இதன்போது அம்பிளாந்துறை இந்து இளைஞர் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் நடனங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0

  • t luxman Monday, 08 September 2014 05:29 AM

    அழகு தனுவின் படைப்பாக்கங்கள் இன்னும் பல வடிவங்களில் வெளி வர எனது வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X