2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

கலைஞர்களுக்கான மாதாந்த நிதியுதவி தொடர்ந்து வழங்கப்படும்: பிரபா கணேசன்

Thipaan   / 2014 செப்டெம்பர் 01 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலைஞர்களுக்கான மாதாந்த நிதியுதவி தொடர்ந்து வழங்கப்படும் என தொலைத்தொடர்புகள், தகவல் தொழில்நுட்பவியல் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் இன்று தெரிவித்தார்.

தியாகி அறக்கட்டளை நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கலைஞர்களுக்கான நிதியுதவி வழங்கும் வைபவத்தின் ஆரம்ப நிகழ்வு அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவுடனேயே நமது கலைஞர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று விரும்பினேன்.

இருந்தாலும் அதற்கான வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. ஆனாலும் கூட இப்போது பிரதியமைச்சர் பதவி கிடைத்ததும் அதற்கான காலம் கனிந்து வந்திருக்கின்றது.

இதன் முதற்கட்டமாகத்தான் கலைஞர்களுக்கு மாதாமாதம் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியின் முதலாவது நிகழ்வு நடைபெறுகிறது.
இன்று 10 பேருக்கு நிதியுதவி வழங்கும் இந்நிகழ்வு அடுத்த மாதம் 20 பேருக்கு வழங்கப்படும் என்ற தகவலை தியாகி அறக்கட்டளை நிறுவனத்தின் ஸ்தாபகர் வாமதேவா தியாகேந்திரா ஜி என்னிடம் தெரிவித்தார்.

இந்த சமயத்தில் அவருக்கும் இந்நிகழ்வுக்கு பக்கபலமாக இருந்த எச்.எச். விக்கிரமசிங்கவுக்கும் கலைஞர்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

பிரதி அமைச்சர் பிரபா கணேசன் அவர்கள் பதவியேற்றுக் கொண்ட பிறகு கலந்து கொண்ட முதலாவது வைபவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் 10 கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

இவ் வைபவத்தில் தியாகி அறக்கட்டளை நிறுவனத்தின் ஸ்தாபகர் வாமதேவா தியாகேந்திராஜி, எச்.எச் விக்கிரமசிங்க, ஊடகச் செயலாளர் மொழிவாணன் மற்றும் உதவி பெற்ற கலைஞர்களும் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .