2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

பௌர்ணமி வகவ கவியரங்கு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 02 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் திங்கட்கிழமை(8) காலை 10 மணிக்கு கொழும்பு 12 குணசிங்கபுர அல் ஹிக்மா கல்லூரியில் வலம்புரி கவிதா வட்டத்தின் கவியரங்கு கவிஞர் வதிரி சீ. ரவீந்திரன் தலைமையில் நடைபெறவுளள்து.

இக்கவியரங்கில் கவிதை hட விரும்பும் கவிஞர்கள், செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீனின் கையடக்கத் தொலைபேசி இல.0777 388149 அல்லது 0714 929642க்கு தொடர்பு கொண்டு தங்களது பெயரினை அறிவிக்கும்படி ஏற்பாட்டு குழுவினர் கோரியுள்ளனர்.

நவமணி பிரதம ஆசிரியரும், முஸ்லிம் மீடியா போரத் தலைவருமான அல்ஹாஜ் என்.எம்.அமீன்  பிரதம அதிதியாக கலந்து கருத்துரை வழங்குவார்.

கவிதா ரசிகர்களும், கவிதை வாசிக்க விரும்புவோரும் கலந்து சிறப்பிக்குமாறு வகவத் தலைவர் என்.நஜ்முல் ஹுசைன், செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஸ்தாபக உறுப்பினர் கலாபூசணம் எஸ்.ஐ.நாகூர் கனி மேற்கொண்டு வருகிறார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .