2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

தென்கயிலை வாசா நாட்டிய நாடகம்

Thipaan   / 2014 செப்டெம்பர் 08 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை ராஜரெட்ணம் நடனாலய மாணவிகள் வழங்கிய தென்கயிலை வாசா (திருக்கோணேஸ்வர ஆலயத்தின் வரலாறு) நாட்டிய நாடகம், புனித மரியாள்கல்லூரி  கலையரங்கில் சனிக்கிழமை (06) நடைபெற்றது.

இந்நிகழ்வில், கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பிரதம அதிதியாகவும் பட்டணமம் சூழலும் பிரதேச செயலாளர் திருமதி. சசிதேவி ஜலதீபன் கௌரவவிருந்திராகவும் கலந்து சிறப்பித்தனர்.

கன்னியா லலிதாம்பிகை  தேவஸ்தானம் சுவாமி ஸ்வஸ்தானந்தாவினால் உருவாக்கி இசைஅமைக்கப்பட்ட இந்நாட்டிய நாடகத்தை நாட்டிய கலைமணி, நாட்டிய வித்தகி திருமதி ரேணுகாதேவி செல்வபுத்திரன் நெறியாள்கை செய்தார்.

திருக்கோணேஸ்வரத்தின் தொன்மையையும் அதன் வளர்ச்சி போக்கையும் 125 நடனமாணவிகள்  அழகாக வெளிப்படுத்தி இருந்தார்கள்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .