2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

நர்த்தனாஞ்சலி

Gavitha   / 2014 செப்டெம்பர் 21 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


யாழ், இந்திய துணை தூதரகமும்  வவுனியா நிருத்திய நுகேதன நுண்கலைக் கல்லூரியும் இணைந்து வழங்கிய நர்த்தனாஞ்சலி நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (21) வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்திய துணைத்தூதரகத்தின் ஆதரவுடன் முதன்முறையாக வவுனியாவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்வேறான நடனநிகழ்வுகளை மேடையேற்றினர்.

கலாநிதி அகளங்கன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கம், இந்திய தூதரகத்தின் துணைத் தூதர் சு. தட்சணாமூர்த்தி, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சரஸ்வதி மோகநாதன், வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராசா உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X