2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

வவுனியா வடக்கு பிரதேச கலை இலக்கிய பெருவிழா

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 25 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா வடக்கு பிரதேச செயலக கலை இலக்கிய பெருவிழா இன்று  வியாழக்கிழமை காலை நெடுங்கேணி கந்தசாமி கோவில்  வளாகத்தில் நடைபெற்றது.

வவுனியா வடக்கு கலை இலக்கிய பேரவையின் ஏற்பாட்டில், வவுனியா வடக்கு பிரதேச செயலகர் க.பரந்தாமன் தலைமையில் நடைபெற்ற இவ்விழா நெடுங்கேணி மகா வித்தியாலய முன்றலிலிருந்து பண்பாட்டு பேரணியுடன் ஆரம்பமாகியது.

இதன்போது தமிழர்களின் பாரம்பரிய கலைகள், பொய்க்கால் குதிரை ஆட்டம், கரகாட்டம், வேடன் ஆட்டம், காவடி, கோலாட்டம் என்பவற்றுடன் தமிழ் வீரர்கள் மற்றும் பெரியார்களின் உருவப்படங்கள் தாங்கிய ஊர்தியும் பண்பாட்டு பேரணியில் இடம்பெற்றது.

இதனையடுத்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடமாகாண கலை பண்பாட்டலுவல்கள் கல்வி அமைச்சின் பிரதிப்பணிப்பாளர் திருமதி உசா சுபலிங்கம் கலந்துகொண்டதுடன், வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.மதிதரன், வவுனியா வடக்கு கல்விப்பணிப்பாளர் க.பராசக்தி, வவுனியா தமிழ்ச்சங்க செயலாளர் தமிழருவி த.சிவகுமாரன், வவுனியா வடக்கு பிரதேச சபை செயலளார் க.பிரபாகரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர். 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .