2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

மட்டு. மக்கள் கலை இலக்கிய விழா

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 01 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கலை இலக்கிய விழா  மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 5ஆம் 6ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

05ஆம் திகதி காலை 08.30 மணிக்கு 'பண்பாட்டுப் பவனி'  மட். நாவற்குடா கண்காணிப் பிள்ளையார் கோவிலிலிருந்து புறப்பட்டு கல்லடி உப்போடை துளசி மண்டபத்தை அடையும். இதில் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கலை மன்றங்களின் பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்துகொள்வர்.

இதனைத் தொடர்ந்து காலை 09.30 மணிக்கு மட்டக்களப்பு அரச அதிபர் தலைமையில் நடைபெறும் கலை நிகழ்வில் 'களப்பு' எனும் புத்தக வெளியீடும் கலைஞர்கள் கௌரவிப்பும் நடைபெறவுள்ளது.

பிற்பகல் 3.30 மணிக்கு 'நானும் எனது எழுத்துலகமும்' என்ற தலைப்பில் உமா வரதராஜன் மற்றும் எஸ்.எல்.எம் கனிபாவின்; உரைகளும் திரைப்படக்காட்சியும் நடைபெறும். இரவு 7.00 மணிக்கு பேச்சியம்மன் கோவில் முன்றலில் தென்மோடி நாட்டுக்கூத்தும் நடைபெறவுள்ளது.
06ஆம் திகதி காலை 9.45 மணிக்கு துளசி மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரச அதிபர் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் பாடசாலை மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் போட்டியில் வெற்றி பெற்ற திறந்தமட்ட, பாடசாலைமட்ட, படைப்பாளிகளுக்கு பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

மாலை 4.00 மணிக்கு மட்டக்களப்பிற்கு சிறப்புச் சேர்க்கும் 'மகிடி' இடம்பெறும். இரவு 7.00 மணிக்கு 'கரகக்கூத்து' இடம்பெற்று கலை இலக்கிய விழா நிறைவுபெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகஸ்தர் த.மலர்ச்செல்வன் தெரிவித்தார்.
    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X