2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

பாரம்பரிய கலை இலக்கிய சங்கமம்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 10 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின்  ஏற்பாட்டில் பாரம்பரிய கலை இலக்கிய சங்கமம் நிகழ்வு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (10) நடைபெற்றது.

இதன்போது  மட்டக்களப்பு மாவட்ட கூத்துக்கலைஞர்கள், பொகவந்தலாவ மலையக காமன் கூத்துக் கலைக்குழுவினர்களின் அறிமுகம் இடம்பெற்றது.

மேலும், கலைஞர்கள் கௌரவிப்பில் பேராசிரியர் மௌனகுருவுக்கு மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத் தலைவர் எஸ்.எதிர்மன்னசிங்கம் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

மலையக காமன் கூத்தியல் செய்திகள் அடங்கிய செய்த்தித்தாள் அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந்து கலாசார அலுவல்கள்;  திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.சண்முகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ், கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இந்து கலாசார அலுவல்கள்;  திணைக்களத்தின் கலாசார உத்தியோகஸ்தர் க.நிர்மலா ஆகியோர் பங்கேற்றனர்.
 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X