2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

கலை இலக்கிய சங்கமத்தின் இறுதிநாள் நிகழ்வு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 12 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பாரம்பரிய கலை இலக்கிய சங்கமம் நிகழ்வின்  இறுதிநாள் நிகழ்வு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

நாவற்குடா இந்து கலாசார நிலையத்தின் மாணவிகளின் கரகம், தேத்தாதீவு கிராமிய கலைக்கழகத்தின் வசந்தன்கூத்து, இணுவில் கந்தசாமி கோயில் இளம் தொண்டர் சபையினரின் இசை நாடகம்,  பொகவந்தலாவை மலையக கூத்தியல் கலைஞர்களின் காமன்கூத்து மற்றும் கலைஞர்கள் கௌரவம்  இடம்பெற்றன.

கலைஞர்கள் கௌரவிப்பில் பேராசிரியர் எஸ்.மௌனகுரு, சாம்பசிவ சிவாச்சாரியார், இந்து கலாசார அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் சண்முகநாதன் ஆகியோர் கலைக்குழுக்களின் தலைவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவித்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X