2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

அகில இலங்கை சைவபுலவர் சங்கத்தின் மாநாடு

Gavitha   / 2014 ஒக்டோபர் 13 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


அகில இலங்கை  சைவபுலவர் சங்கத்தின்  மாநாடும்  பட்டமளிப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை (12) திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி சம்பந்தர் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, இவ்வருடம் நடத்தப்பட்ட சைவபுலவர் , இளஞ்சைவ புலவர் பரீட்சையில் தோற்றி சித்தி பெற்ற 13 பேருக்கு, நாதன சைவபுலவர் பண்டிதர் இ.வடிவேல் தலைமையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

 இதன்போது,  சைவநாதம் மலர் வெளியீடு இடம்பெற்றது. நூலின்   முதல் பிரதியினை, ஸ்ரீ பத்தரகாளிஅம்பாள் தேவஸ்தான ஆதீனகர்த்தா வேதாகம மாமணி சோ.ரவிச்சந்திர குருக்கள் பெற்றுக் கொண்டார்.

இவ்விழாவில் சைவத்திற்கு தொண்டாற்றிக்கொண்டிருக்கும். சைவபுலவர் மு.திருஞானசுந்தரம், சைவபுலவர் கலாநிதி சா.தில்லைநாதன் ஆகியோருக்கு சிறப்பு கௌரவம் அளிக்ப்பட்டது.

கௌரவ பட்டத்தினை வேதாகம மாமணி சோ.ரவிச்சந்திர குருக்கள் பெற்றுக் கொண்டார்.  சிவநெறி புரவலர் என்னும் பட்டத்தினை என்.சிவதாசனும்,  சிவநெறி தொண்டர் என்னும் பட்டத்தினை எஸ்.தர்மலிங்கம், எஸ்.குலவீரசிங்கம், செவிபுணசேகரம், க.வெற்றிவேல், வ.தங்கவேல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

யாழ் பல்கலைக்கழகத்தில் சைவசித்தாந்த முதுமானிப்பட்டம் பெற்ற சைவ புலவர்களான  க.நித்தியசீலன், ச.முகுந்தன், த.குமரன், அ.அரன்மகன், ஐ.கமலேஸ்வரன். திருமதி ஜெயந்தி கமலேஸ்வரன் ஆகியோருக்கு  சிறப்பு கௌர பட்டங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இவ்விழாவில், கலைக்கூடம் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X